Thursday, October 15, 2009

தமிழன்


பல மொழிகள் தெரிந்தும் பயனில்லை
தடுமாறிக்கொன்டிருக்கிறேன் (றோம்)
தூய  தமிழில் பேச

இயற்கையின் கவிதை


Thursday, October 8, 2009

மழை நாளில்

அன்று

ஒரு மழை நாளில்
ஊரிலிருந்து அப்பா கொண்டுவந்திருந்த
புது சட்டை செருப்பையும் அணிந்துகொண்டு
மழையில் தெருவில் இறங்கி
சறுக்கி விழுந்தேன்

இன்று

ஒரு மழை நாளில்
சறுக்கி விழுந்தேன்
என் பால்யத்தில்